மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் கல்லாங்குத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாக்கியம்மாளின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *