மாவு அரைத்துக் கொண்டிருக்கும் போது…. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாளையம் புதூர் கிராமத்தில் மயிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள பேக்கரி ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணிக்கு சென்றுவிட்டு வழக்கம்போல கிரைண்டரில் அரிசி மாவு அரைத்துக் கொண்டு இருந்தார். அப்போது மயிலி மீது மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அவரை மீட்டு பாளையம்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *