“குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட பெண்” திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் தங்கராசு-பொற்செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பொற்செல்வி குளிப்பதற்காக சுடுதண்ணி வைக்க ஹீட்டர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்து விட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பஞ்சப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பொற்செல்வி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குளித்தலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *