ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் குமாரசாமி-லக்ஷ்மி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் நண்டு பிடிப்பதற்காக லக்ஷ்மி சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஓடை வெள்ளத்தில் விழுந்து விட்டார்.
இதில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்தரமேரூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.