மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ புரத்தில் ஆனந்தன்-கவிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் கவிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். எனவே சிகிச்சைக்கான அவரை குடிபோதை மற்றும் மனநல சிகிச்சை மையத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் கவிதா தான் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.