கணவன்-மனைவி தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தர்மபுரியில் நடந்த சோகம்….!!!

குடும்பத்தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி சந்திரா குடும்ப தகராறு காரணமாக தனது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *