“ஜாமீனில் வெளியே வந்த பெண்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!!

ஜாமீனில் வெளியே வந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்பு அமைந்துள்ளது. இங்குள்ள மரத்தில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய படி பெண் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது செட்டிபாளையத்தில் சேர்ந்த மகேஷ் என்பவரின் மனைவி கலையரசி என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் கணவர் மகேஷுக்கு கலையரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கோபமடைந்த கலையரசி தனது கணவர் குடிக்க வைத்திருந்த மதுவில் விஷத்தை கலந்து வைத்துள்ளார்.

இது தெரியாமல் அதனை குடித்த மகேஷும், அவரது நண்பர் கார்த்திக் என்பவரும் உயிரிழந்து விட்டனர். இந்த கொலை வழக்கில் கலையரசி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *