“என் கணவர் வேலைக்கு செல்லவில்லை” இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள நல்லூர் பகுதியில் சிவசங்கரன்-கலையரசி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவசங்கரன் சரியாக வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கலையரசியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி கலையரசியின் பெற்றோர் லாலாபேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு கலையரசிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *