“ஹோட்டல் நஷ்டத்தில் போவதால் வந்த தகராறு” மனைவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோட்டை ஜாகிர் தெருவில் குமார்-லாவண்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1மகனும், 1மகளும் உள்ளனர். இதில் கணவன்-மனைவி இருவரும் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஹோட்டலில் சரியாக வியாபாரம் இல்லாததால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஹோட்டல் சம்பந்தமாக இருவருக்கும்  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த லாவண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தர்மபுரி டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாவண்யாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *