கணவரை பிரிந்த ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பகுதியில் நாகராஜ்-பவித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இதில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா தனது தாயார் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் பவித்ரா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *