இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கி கொண்ட பெண்மணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தடையை மீறி மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டதிலுள்ள கூடங்குளம் பகுதியில் தடையை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு  சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் இசக்கியம்மாள் எனும் பெண் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் காவலர்களின் உதவியுடன் அந்த பெண்ணை கைது செய்ததோடு அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.