கடனை திருப்பித்தர தாமதமானதால் கொலை மிரட்டல் விடுத்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் செந்தமிழ் நகரில் லட்சுமணன் – கலா தம்பதியினர் வசித்து வருகின்றன. இந்நிலையில் கலா குடும்ப சூழ்நிலை காரணமாக அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமி என்பவரிடம் வட்டிக்கு 10,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து கலாவின் வீட்டிற்கு வந்த லட்சுமி வட்டி பணத்துடன் அசலையும் சேர்த்து தரும்படி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த லட்சுமி கலாவிடம் பணத்தை கொடுத்து விட்டு மாட்டை மீட்டுச் செல் என்று கூறி கலா வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து லட்சுமி வீட்டிற்கு கலா தனது மாட்டை மீட்டுபதற்காக சென்றுள்ளார். அப்போது கலாவை பார்த்த லட்சுமி கோபமடைந்ததோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கலா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில்வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லக்ஷ்மியின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து கலாவின் பசுமாட்டை மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.