“2 ஆண்டுகளாகியும் தரவில்லை” தீக்குளிக்க முயன்ற பெண்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள் தங்களது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மனு கொடுப்பதற்காக சென்ற 2 பெண்கள் தங்கள் கொண்டு சென்ற மண்ணெண்ணையை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் ஓசூர் பகுதியில் வசிக்கும் உபீனா மற்றும் குல்நாஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு தர வேண்டிய சீட்டு பணத்தை கடந்த 2 ஆண்டுகளாக கயல்விழி என்பவர் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதுகுறித்து இந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இரண்டு பேரும் குடும்பத்தினரோடு தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *