லடாக்கில் துப்பாக்கிச்சூடு… மறுப்பு தெரிவித்த இந்திய ராணுவம்.. நடந்தது என்ன..?

இந்திய ராணுவம் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

சமீப காலமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே என்னை எல்லை பிரச்சனை அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி விட்டதாக அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பதற்றத்தைத் தடுப்பதற்காக இரு நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் பதற்றம் தணிந்து பாடில்லை.

சீனா தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து கொண்டே வருகிறது. இதற்கிடையில் இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளிப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்திய ராணுவம் லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டி நாங்கள் எந்த துப்பாக்கிச் சூட்டையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய தரப்பிலிருந்து சீன எல்லைப் பகுதிக்கு எந்த தாக்குதலும் நடத்தவில்லை. சீன ராணுவம் தான் வானில் துப்பாக்கிச்சூடு நடத்தியது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *