கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் மஞ்சமேடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகம் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஆறுமுகம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.