வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெருமுகை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்தயாநிதி. இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியுள்ளது.

இந்த விபத்தில் சங்கர்தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர்தயாநிதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *