”தண்டவாளத்தில் சிக்கிய கைலி” மாண்டு போன நகைக்கடை தொழிலாளி ….!!

தூத்துக்குடியில் தண்டவாளத்தில் கைலி சிக்கியதால் ரயிலில் அடிபட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

தூத்துக்குடி சுந்தரராமன் புரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் என்பவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பொழுது அவரது கைலி தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த முத்துநகர் விரைவு ரயில் பால கணேஷ் மீது வேகமாக மோதியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பால கணேஷுக்கு காது கேட்காது என்பது தெரியவந்துள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *