அரைசதம் விளாசிய கெய்ல் 65 (42) ….. KXIP அணி 15 ஓவர் முடிவில்125 /2……!!

பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 125/2  ரன்களுடன் விளையாடி வருகிறது. 

ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 ரன்களில்  குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து  களமிறங்கிய  அகர்வாலும், கெயிலும் ஜோடி சேர்ந்தனர்.. இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பொறுமையாக எதிர் கொண்டு விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இதையடுத்து வீசிய கெளதம் 9 ஓவரின் முதல் பந்தில் கெய்ல் சிக்சர்  அடித்தார்.

அதே ஓவரில் அகர்வால் 22 (25) எல்லைக்கோடு அருகே குல்கர்னி வசம் பிடிபட்டார். இதையடுத்து களமிறங்கிய சர்ப்ராஸ் கான் களமிறங்கினார். அதை தொடர்ந்து உனத்கட் வீசிய 12 ஓவரில்  கெய்ல் 4, 4, 4 6 என அதிரடியில் இறங்க அந்த ஓவரிலேயே அரைசதம் கடந்தார். தற்போது கெய்ல்65 (42), சர்பராஸ் கான்  26 (20) ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.