ராணுவத்தில் பெண்களுக்கு இடம்…. குவைத் அரசின் நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட துணை பிரதமர்….!!

ராணுவத்தில் பெண்களுக்கு இடம் வழங்கப்படும் என்று ஷேக் அகமது அல் அலி சபா அறிவித்துள்ளார்.

குவைத் நாடு பெண்களுக்கென தனியான விதிமுறைகளை கொண்ட நாடாகும். இருப்பினும் அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக காவல் துறையில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு ராணுவத்திலும் அவர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் அகமது அல் அலி  சபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ராணுவத்தில் பெண்கள் பணியாற்றுவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Sheikh Sabah Al-Khalid reappointed as Prime Minister of Kuwait

குறிப்பாக காவல்துறையில் பெண்கள் பணியாற்றுவதன் அடிப்படையில் தான் ராணுவத்திலும் அவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும் துவக்கத்தில் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் மற்றும் அதன் துணை பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குவைத் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *