“சீசன் தொடங்கியாச்சு” குளு குளுவென்று இருக்கும் குற்றாலம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் இரவு நேரத்திலும் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் இங்கு குளிக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது.

தற்போது கடுமையான வெயிலும் அடித்து வருகின்றது.  ஏற்கனவே பெய்த மழையினால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இருந்துள்ளது. ஆகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் குளித்து சென்றுள்ளனர். இன்னும் மழை பெய்தால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று சுற்றுலா பயணிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இங்கு இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இங்கும் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *