குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் முதல் முறையாக தோல்வி… வருத்தம்…!!!

தொழில்முறை குத்துச் சண்டையில் முதன்முறையாக இந்திய வீரரான விஜேந்தர் சிங் தோல்வி அடைந்துள்ளார். அவரை ரஷ்யாவை சேர்ந்த இளைஞன் தோற்கடித்துள்ளார். 

இந்திய வீரர் விஜேந்தர்சிங்  தொழில்முறை குத்துச்சண்டை போட்டிற்காக  கோவாவில் உள்ள ஆற்றுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலின் மேல்தளத்தில் நேற்று இரவு குத்துசண்டை  நடத்தப்பட்டது. அதில் இந்தியாவின் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் தனது 13வது பந்தயத்தில் ரஷ்யாவை சேர்ந்த ஆர்டிஸ் லோப்சனை எதிர்கொண்டுள்ளார். இந்த மோதல் 8 ரவுண்டு களைக் கொண்டது என்றும் ஒவ்வொரு ரவுண்டும் சுமார் 3 நிமிடங்கள் உள்ளடக்கி நடத்தப்படும்.

இதில் முதல் சுற்றிலேயே தன்னுடைய உயரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆர்டிஸ்ட் லோப்சன், விஜேந்தருக்கு  எதிரான தாக்குதலை தொடங்கினார். அதன் பின் சற்று நிலை தடுமாறினாலும் விஜேந்தர் 2 -வது சுற்றில் தகுந்த பதிலடி திருப்பிக் கொடுத்தார். ஆனால் அதற்குப்பிறகு  அடுத்து வரும் சுற்றுகள் அனைத்தும் ஆர்டிஸ் லோஷன் சண்டையிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான விஜேந்தர் சிங் தொழில்முறை போட்டியில் அடியெடுத்து வைத்ததில் இருந்து வெற்றியை சந்தித்து வீர நடையில் வந்துள்ளார். தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வாகை சூடி இருந்த அவரது வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஆர்டிஸ் லோசன் வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் வெற்றிக்கு பிறகு லோஷன் கூறுவது, ‘சிறந்த வீரனான விஜேந்தர் சிங்குக்கு எதிராக எனது விவேகமும், திறமையும் கை கொடுத்துள்ளது. இந்தப்போட்டியில் சிறப்பு வாய்ந்த அனுபவமாகும். விஜேந்தரின்  வெற்றி பயணத்தை முறியடித்த முதல் வீரன் என்ற பெருமையை பெற்று பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்’என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஜேந்தர் சிங் கூறுவது, ‘இது ஒரு சிறந்த வீரருக்கான போட்டியாகும். லோசனின்  இளமையும், வலிமையும், விவேகமும் கொண்ட வலிமை  மிக்க போட்டியாளராக உள்ளார். இந்த சரிவிலிருந்து திறமைசாலியாக மீண்டு வந்து மாஸ்கோவில் நடைபெறும் போட்டியில் லோஷனை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *