பெண்களே!… குறுகிய காலத்தில் அதிக தொகை சேமிக்கணுமா?…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1  ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்குரிய சிறுசேமிப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்தார். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் பெண்களுக்கான சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளனர்.

மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் வாயிலாக பெண் குழந்தைகள் மட்டுமின்றி பெண்கள் தங்களது பெயரில் கூட  அதிகபட்ச  தொகையாக ரூ.2 லட்சம்  வரை டெபாசிட் செய்யலாம் என பட்ஜெட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டம் 7.5% நிலையான வட்டி விகிதத்தை வழங்கும்.

மிகக் குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையை சேமிப்பதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இதற்குரிய முதிர்வுகாலம் 2 வருடங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான  புது சிறுசேமிப்பு வசதி 2023 -2025க்கு இடையில் 2 ஆண்டுகளுக்கு இருக்கும்.