கும்பம் ராசிக்கு….! மனகுழப்பம் இருக்கும்….! தேவைகள் பூர்த்தியாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் இருக்கும்.

இன்று தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். திடீர் வரவு வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். நிதானமான போக்கு இருக்கும். இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்க கூடிய சூழல் இருக்கும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நீங்கள் செயல்படுவீர்கள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் இருக்கும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். காதல் கொஞ்சம் கஷ்டத்தை ஏற்படுத்தும்.

அதன் நிலைபாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். காதல் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு அதிக அளவில் பணிச்சுமை இருக்கும். மாணவர்கள் சில செயலை செய்யும் போது அமைதி வேண்டும். பொறுப்பாக இருந்து எதை செய்தாலும் வெற்றி நிச்சயம். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *