கும்பம் ராசிக்கு….! பிரச்சனைகள் தீரும்….! தடைகள் விலகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எல்லாவிதமான காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்.

இன்று எடுத்த வேலைகளை முடிக்காமல் நீங்கள் ஓய மாட்டீர்கள். எந்த ஒரு விஷயமாக இருக்கட்டும் அந்த விஷயத்தை அடிவரை சென்று அதனை ஆராய்ந்து பார்த்து அதில் உள்ள நல்லது கெட்டதுகளை செய்து முடித்து விடுவீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வரும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். தாயுடன் அதிகமாக கோபத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். தந்தையுடனும் மனவருத்தங்கள் வரும். தந்தை செய்யும் செயலைப் பார்த்து மனவருத்தங்கள் இருக்கும். பழைய கடனைத் தீர்க்க புதிய வழியை யோசிப்பீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளி வட்ட தொடர்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் முன்னேற்ற பாதையை வடிவமைத்துக் கொள்ள முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். இன்று சாதுரியமான பேச்சால் எந்தவிதமான நன்மையும் ஏற்படும். எல்லாவிதமான காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்.

எதையும் புரிந்து கொண்டு செய்ய வேண்டும். வியாபாரத்தில் நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் சரியாகும். செல்வம் சேரும். காரிய தடைகள் நீங்கும். செல்வாக்கு கூடும். நட்பிடம் அன்பை வெளிப்படுத்தி சாதகமான பலனை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதல் மாற்றத்தை கொடுக்கும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க முடியும். எதையும் சிறப்பாக செய்து பாராட்டுகளைப் பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *