கும்பம் ராசிக்கு….! கோபம் ஏற்படும்….! பண தேவை பூர்த்தியாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இன்று யதார்த்தமாக அனைவரிடமும் பழக நேரிடும். கடந்த மூன்று நாட்களாக இருந்த பிரச்சனைகள் கூட சரியாகிவிடும். மனதிற்குள் இருந்த சஞ்சலங்கள் நீங்கி நிம்மதி ஏற்பட்டு விடும். எண்ணிய காரியங்கள் நடக்கும். அரசு உயர்பதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். உத்யோகத்தில் பணிபுரிபவர்களுக்கு அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதிகப்படியாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் மூலம் வரவேண்டிய பணம் கண்டிப்பாக வந்து சேரும்.

புதிய வாகனங்கள் வாங்க கூடிய யோகம் இருக்கின்றது. வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். முன்கோபங்கள் காட்ட வேண்டாம். காதலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். மாணவர்கள் மேற்கல்விக்கான முயற்சியில் கடினமான சூழல் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்வில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:    7 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் மெரூன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *