கும்ப ராசிக்கு…புதிய முயற்சிகள் வேண்டாம்…காரியத்தடைகள் நீங்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!  இன்று நண்பரின் எதார்த்த பேச்சு கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். பண வரவுக்கு ஏற்ப செலவுகளை நீங்கள் திட்டமிட்ட கூடும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய சூழல் இருக்கும். எதிலும் முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்.

புதிதாக முயற்சிகள் மட்டும் ஏதும் செய்ய வேண்டாம். சக ஊழியர்களுடன் கொஞ்சம் கருத்து வேற்றுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். காதலர்களுக்கு இன்றி எந்த விதத்திலும் பிரச்சினை இல்லை. கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

வசீகரமான பேச்சு என்று அனைவரையும் கவர்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீளம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *