ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம்…. ஆனந்த குளியல்…. ரசித்து பார்த்த அமைச்சர்…!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை ஒன்று உள்ளது. இது கோவில் வளாகத்தில்  பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குளிப்பதற்காகவே கோவில் வளாகத்தில்  நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இது உபயதாரர்கள் பங்களிப்பில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்தாகும்.

இதனையடுத்து இந்த குளத்தை சுற்றி கான்கீரிட் தளம் போடப்பட்டு, 8 அடி உயரத்தில் சுவர் மற்றும் 29 அடி நீள, அகலத்தில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதை சுற்றி பாதுகாப்பாக இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதன் பின் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதில் மங்களம் யானை உற்சாக குளியல் போட்டது. இந்த காட்சியை அமைச்சர் மிகவும் ரசித்து பார்த்துள்ளார். இதனையடுத்து  மங்களம் யானையின் வயது 55. இது கடந்த 1982-ஆம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரால் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.