”குமாரசாமியின் ராஜினாமா ஏற்பு” கர்நாடக ஆளுநர் அறிவிப்பு ….!!

கர்நாடகாவின் குமாரசாமி அரசு கவிழந்த நிலையில் அவரின் ராஜினாமாவை கவர்னர் ஏற்பதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 14 மாதங்களாக நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி கடந்த 2 வார பரபரப்புக்கு பின் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு  99 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவாகவும் , 106 சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

Image

இதையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதலவர் குமாரசாமி  வழங்கினார். முதல்வர் குமாரசாமி குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வாஜூபாய் வாலா அறிவித்துள்ளார்.