குலுக்கல் முறையில் தேர்வு…. தீவிரமாக நடைபெறும் பணி…. அதிகாரிகளின் செயல்…‌.!!

தேர்தலில் வேலை பார்ப்பதற்காக அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்காக அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் பணியமர்த்தும் வேலை நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இம்மாவட்டத்தில் இருக்கும் 543 வாக்குச்சாவடி மையங்களில் இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இதனை அடுத்து மொத்தமாக 1,164 வாக்குச்சாவடி மையங்களில் தற்போது 9, 383 அலுவலர்கள் பணிபுரிய இருக்கின்றனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் சீரற்றமயமாக்கல், ஒன்றிய அளவில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களால் 2-வது சீரற்றமயமாக்கல் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *