“குளிர்கால ஒலிம்பிக் போட்டி”… ராஜீய ரீதியில் புறக்கணிப்பு…. கண்டனம் தெரிவித்த பெய்ஜிங்….!!!

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறியதாவது “ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கர் இனத்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக கூறி, சீனாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் அமெரிக்கா புறக்கணிப்பதாக அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது ஆகும். உய்கர் இனத்தவர்கள் இன அழிப்புக்கு உள்ளாவதாக அமெரிக்கா சொல்வது இந்த நாட்டின் மிகச் சிறந்த பொய்யாகும். இதில் அமெரிக்கா வெறும் வதந்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறது.

இதனால் அந்நாட்டின் தவறான உள்நோக்கத்தை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் நேர்மை குறித்த சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. இதனிடையில் விளையாட்டுப் போட்டிகளில் அரசியல் தலையீடு கூடாது என்ற அடிப்படையில் கோட்பாட்டிற்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. இந்த போட்டிகளுக்கு அமெரிக்காவின் தூதுக்குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என சீனா இதுவரை அழைப்பு விடுக்கவில்லை.

ஆனால் அழைப்பை பெறுவதற்கு முன்பே தங்களது அதிகாரிகளின் வருகைக்கும், ஜின்ஜியாங் மாகாணத்தில் நடைபெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் அமெரிக்கா முடிச்சுப் போடுகிறது. இதற்கு முன்பாக 2022-ஆம் வருட குளிர்கால ஒலிம்பிக் போட்டி குறித்து சீனாவுக்கு தங்கள் நாட்டிலிருந்து தூதுக்குழுவை அனுப்பப் போவதில்லை என்று அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார். ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் இனத்தவர்கள் சீன அரசால் இன அழிப்புக்குள்ளாவது, அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக” அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *