ஓட ஓட விரட்டி கொட்டிய குளவிகள்…. காயமடைந்த 6 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேச்சேரி புதிய காலனி பஜனை கோவில் தெருவில் சிலர் நடந்து சென்றனர். அப்போது முட்புதரிலிருந்து வந்த குளவிகள் தெருவில் நடந்து சென்ற கற்பகம்(57), துர்கா(32), ராணி(45), ரேணுகா(19), நித்யா(34), கோவிந்தசாமி(49) ஆகிய 6  பேரையும் கொட்டியுள்ளது. இதனால் 6 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் குளவிகள் விடாமல் துரத்தி சென்று அவர்களை கொட்டியது. இதனால் மயக்கம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.