குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த அயல்பொருள்…. மருத்துவர்களின் துரித செயல்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த 7 மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கோவை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு உள்நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்தபோது அயல்பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக் குழாயில் சிக்கி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து உடனே காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இணைந்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து அப்பொருளை அகற்றி உயிரை காப்பாற்றினர். இவ்வாறு மூச்சுத் திணறலுக்கான காரணத்தை உடனே கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய அக்குழுவினருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் சக மருத்துவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply