இவர் தான் காரணம்…. தம்பியின் வெறிச்செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

குடும்பத் தகராறில் அண்ணன் கழுத்தை அறுத்த டிராக்டர் டிரைவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள மேல்பட்டி ரோடு காக்காதோப்பு கிராமத்தில் கருணாகரன் என்ற விவசாயி வசித்துவருகின்றார். இவருடைய தம்பி யோகநாதன் டிராக்டர் டிரைவராக இருக்கின்றார். இதில் யோகநாதன் மனைவி பாரதி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாணியம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டில் பிள்ளைகளோடு கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். இதற்கு தனது அண்ணன் கருணாகரன் தான் காரணம் என கருதி அடிக்கடி யோகநாதன் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கிராமத்தில் இருப்பவர்கள் அண்ணன்- தம்பி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து கருணாகரன் தனது சொந்தமான மாட்டுக் கொட்டகையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த யோகநாதன் அண்ணனின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதனால் கருணாகரன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி வருவதற்குள் யோகநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் கருணாகரனை அப்பகுதியில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருணாகரனின் மகள் சிந்து அளித்த புகாரின்படி குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, சரவணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணனின் கழுத்தை அறுத்த யோகநாதனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *