“கே.எஸ் அழகிரி குடும்பமா, ஐஏஎஸ் அதிகாரியா” டேபிளுக்கு பறந்த ரிப்போர்ட்…. முதல்வர் ஸ்டாலின் செம டென்ஷன்….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் மற்றும் பேத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில்  ஐஏஎஸ் அதிகாரி மது போதையில் தன்னை கன்னத்தில் அறைந்ததாக அழகிரியின் பேத்தி கூறியுள்ளார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கே.எஸ் அழகிரியின் பேத்தி மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் கேஎஸ் அழகிரியின் பேரன் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசும் ஒரு வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான ஒரு ரிப்போர்ட் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது.

அந்த ரிப்போர்ட்டை பார்த்த முதல்வர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் காங்கிரஸ் கட்சியினர் திமுகவில் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால் கே.எஸ் அழகிரியின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு கேஎஸ் அழகிரியின் பேரன் பேத்தி மற்றும் ஆட்கள் ஐஏஎஸ் அதிகாரியிடம் மோதலில் ஈடுபட்ட வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் நடவடிக்கை எடுக்காமலும் எடுக்க முடியாது. மேலும் ஒரு அதிகாரியாக இருந்துவிட்டு எதற்காக மோதலில் ஈடுபட வேண்டும் என முதல்வர் தற்போது கேள்வி எழுப்பி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.