“கெட்டதிலும் ஒரு நல்லது”…. Covid க்கு பின் தியேட்டருக்கு வரும் கூட்டம் அதிகரிப்பு….. நடிகர் நாகார்ஜுன் பெருமிதம்…..!!!!!

நாகர்ஜூன் நடித்த கோஸ்ட் என்ற தெலுங்கு படம் “ரட்சன் கோஸ்ட்” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வர உள்ளது. இந்த பட விழாவில் நாகர்ஜுன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நான் பிறந்தது சென்னையில் தான். கல்லூரி வரை படித்ததும் சென்னையில் தான். இங்கே உள்ள ரோடுகளும், பாலங்களும் எனக்கு நன்றாக தெரியும். நான் வாலிப வயதை அடைந்தபோது என்னை அப்பா ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்.

அதனை தொடர்ந்து கோஸ்ட் படம் கடந்த வருடமே திரைக்கு வந்திருக்க வேண்டிய படம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போய்விட்டது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளது. என்னவென்றால் கொரோனா பொதுமக்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்களுக்கு ரசிகர் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்து இருக்கிறார்கள். இது நம் ஒற்றுமையை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.