புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டி …… !!

புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Image result for கிருஷ்ணசாமி

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி , நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகின்றேன் என்று அறிவித்தார். எங்களுக்கு தேர்தல் ஆணையத்தில் தனி சின்னம் கேட்டும் விண்ணப்பித்துள்ளோம் இன்னும்  ஒரு சில தினங்களில் தங்களுக்கு சின்னம் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை விடுவிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார் .