வாசலில் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை கோவில் வாசலில் போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொண்ணவேடு கிராமத்தில் கங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வாசலில் பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தையை கோவில் வாசலில் விட்டு சென்ற நபரின் விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *