அனுமதி வழங்கிய அரசு…. மீண்டும் திறக்கப்பட்ட கோவில்கள்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இத்தடையை நீக்கி அனைத்து நாட்களிலும் கோவில்களுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்களும், கட்சியினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததால் அனைத்து கிழமைகளிலும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில், மாரியம்மன் கோவில், பாலசுப்பிரமணியன் கோவில் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்பட்டதால் ஆர்வமுடன் வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *