கொரோனவால வேலை போச்சி…. ஒரே நாள் நைட்ல…. அதிர்ஷ்டம் வந்துச்சி….!!

கொரோனாவால் வேலை இழந்தவருக்கு ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் வசிப்பவர் நவநீத் சஞ்சீவன். இவர் வெளிநாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனோ காரணமாக அந்நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் நோட்டீஸ் காலத்தில் இருந்த இவருக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகும் அதிர்ஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து துபாய் டூட்டி ஃப்ரி ரஃபல் எனப்படும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வாங்கிய அந்த லாட்டரிக்கு திடீரென இந்திய மதிப்பில் ரூ7.3 கோடி பரிசு விழுந்துள்ளது. ஆனால் இது பற்றி தெரியாத நவநீத் தனக்கு புதிய வேலை எதாவது கிடைக்குமா? என்று தேடி அழைந்து கொண்டிருந்துள்ளார். அப்போது தான் அவருக்கு துபாய் டூட்டி ப்ரீ ரஃபலில்லிருந்து லாட்டரியில் வெற்றி பெற்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த நவநீத் இதை தன்னுடன் லாட்டரியை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

துபாய் டூட்டி ஃப்ரி ரஃபல் லாட்டரியை அதிகமாக அந்நாட்டில் பணியாற்றும் நம் இந்தியர்கள் தான் வாங்குகிறார்கள் என்று கூறப்படுகின்றது. இது குறித்து அவருடைய மனைவி கூறுகையில், “ரூ.20 லட்சம் கடனில் இருக்கும்  இந்த பரிசு பணம் பெரும் உதவியாக இருக்கும் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். கொரோனாவால் வேலையிழந்தவர் திடீரென ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன அதிசய சம்பவம் தற்போது துபாய் நடந்துள்ளது. பலரைக் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூகவலைத்தளங்களில் இது குறித்த பேச்சு அதிகமாக நடந்துவருகிறது.