மீண்டும் 2 வாரங்களுக்கு தொடரும்…. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு…. தெரிவித்தார் மலேசியா பிரதமர்….!!

ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மலேசியாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஜூன் 7 ஆம் தேதி வரை பகுதி அளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ கடந்துள்ளது.

இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 1 முதல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மலேசியா பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

இந்த முழு ஊரடங்கின் போது அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இதுவரை 5,49,514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *