உறுதிப்படுத்தப்பட்ட தொற்று” ஒரே நாளில் 353 பேர் பாதிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரேநாளில் 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 353 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 109 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அந்த மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 1455 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.