பிரபல நாட்டில் அதிகரிக்கும் ஓமிக்ரானின் பாதிப்பு…. முக்கிய தகவல் வெளியிட்ட பிரதமர்….!!

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிற்கு வந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது உருமாற்றமடைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி வரை தளர்த்தப்பட்ட கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *