கோயம்புத்தூரில் கொடிசியா மைதானம் ஒன்று உள்ளது. அங்கு தமிழ்நாடு கேட்டரிங் சங்கம் சார்பில் டிஷ்கள்  வழங்கப்பட்டது. இது கொங்கு திருமண உணவு திருவிழா ஆகும். இதில் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 400க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாற்றப்பட்டனர். இதற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 799 ரூபாயும், குழந்தைகளுக்கு 499 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்தனர்.

ஆன்லைனில் ஏராளமான மக்கள் முன்பதிவு செய்து, திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆனால் ஏற்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தினால், ஒவ்வொரு உணவையும் வாங்க மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துக் கிடந்தனர். மக்களின் கூட்டத்தை கையாள முடியாததால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் அங்கு வந்த மக்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிக அளவில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததே இதற்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.