காங் MLA 10 பேர் தகுதி நீக்கம்…சித்தராமையா பேட்டி..!!

ராஜினாமா செய்த 10 காங்கிரஸ் MLAக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை மனு  அளிக்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அதிருப்பதி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தததையடுத்து,மும்பை பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளையும் பாஜக கட்சி மேற்கொண்டதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியது.இதையடுத்து ஆட்சியை காப்பற்ற பெங்களூருவில்  காங்கிரஸ் MLAக்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது

Image result for சித்தராமையா

இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, ராஜினாமா செய்த கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும்,அதன் படி சபாநாயகரை சந்தித்து 10 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் ராஜினாமா செய்த அனைத்து MLAக்களும்  திரும்ப வரவில்லையெனில் சட்ட ரீதியாக பல விளைவுகளை சந்திக்க நேரிடும், எதிர் காலத்தில் அமைச்சர் பதவியும் அளிக்கப்படாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.