கொல்கத்தா அணி 5 ஓவர் முடிவில் 31/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.
12 ஐ.பி.எல் திருவிழாவின் 10-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டிடெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும் , நாய்க்கும் களமிறங்கினர். நாய்க் மந்தமாக விளையாடி வந்த நிலையில் லமிச்சானே பந்து வீச்சில் 7 (16) ரன்களில் எல்.பி . டபுல்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா6 (3) கிறிஸ் லின்16 (10) ரன்னுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.