இன்றைய ஐ.பி.எல் போட்டியில் KKR VS SRH பலப்பரீட்சை…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஐபிஎல் போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக 2 அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு  வருகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த ஐ.பி.எல் போட்டியில் பவுலிங்கின் மூலம்  அதிகமான போட்டியில் எதிரணியை வீழ்த்தியது. அதனால் இந்த முறையும் பந்து வீச்சின் மூலம் எதிரணியை அதிக ரன்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் பேட்டிங்கில் கடந்த போட்டியில் விளையாடாத  டேவிட் வார்னர் இந்தமுறை களமிறங்குவதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.மேலும்  கேன் வில்லியம்சன், யூசுப் பதான், விஜய் சங்கர் நட்சத்திர வீரர்களும் உள்ளனர்.

அதே போல கொல்கத்தா அணியிலும் பேட்டிங்கில் கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா, ஆண்ட்ரே ரசல் ஆகிய நட்சத்திர வீரர் களும் உள்ளனர். பந்து வீச்சிலும் சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளதால் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.