செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, இந்த காட்சியை காப்பாற்றுகின்ற இடத்தில் அண்ணன் ஓபிஎஸ் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்த கட்சியை உடைத்து எடப்பாடிபழனிசாமி என்ன லாபத்துக்காக பண்ணுறாரு என தெரியல ? அது ஒன்ன தான் ஆராய்ச்சி பண்ணி எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இணைப்புக்கு வரவே முடியாது, சேர்க்கவே முடியாது அப்படின்னு சொல்ல வருவதற்கான  அர்த்தம்….  யார் ? யாரோடு டீல் போட்டு இருக்காங்க ? இந்த கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணாதீங்க என்று சொல்லி,  ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் மூலமாக சரணாகதி அடைந்து, திமுக அரசோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அரசாங்கம் சார்ஜ் சீட் கூட போடமா  இருக்கு.

ஆனால் கோட்டிலிருந்து ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க. கொடநாடு கொலை வழக்கிலிருந்து எல்லாமே பெண்டிங். நீங்க நினைச்சு பாருங்க…  இந்த அரசை என்ன கேட்கிறேன் ? ஏன் இன்னும் அரெஸ்ட் பண்ணாம இருக்கீங்க ? என தெரிவித்தார்.