12 வேடம்… மிரட்ட வரும் விக்ரம்… கோப்ராவின் முக்கிய தகவல்..!!

12 வேடத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தை தொடர்ந்து அவர் மகன் துறவ் கதாநாயகனாக நடித்து ஆதித்யா வர்மா மீது கவனம் செலுத்தி வந்துள்ளார். தற்போது இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு கோப்ரா என பெயர் வைத்துள்ளனர்.

விக்ரம் நடிக்கும் 58வது படம் திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது. படத்தை தயாரிப்பது 7 க்ரீன் ஸ்டுடியோ, இசையமைப்பது இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என தகவல் வெளியாகி உள்ளது.  திரைப்படத்தில் கதாநாயகியாக கேஜிஎப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு மொத்தம் 12 வேடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆனந்தத்தைக் கொண்டு வந்தது. தற்போது இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவலையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தகவலின்படி கோபுர திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 28 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *