முஹரம் என்றால் என்ன? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

முஸ்லிம்களின் பண்டிகையான முஹரம் பண்டிகையின் சிறப்பு அம்சங்களைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.

ஷன்னி ஷியாக்கள், முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு முஹரம் பண்டிகை ஆகும். ஷியாக்கள் முஹரத்தை துக்கம் அனுஷ்டிப்பு நாளாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். முஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி தங்களை வருத்திக்கொண்டு ஊர்வலம் செல்வதை பலரும் பாக்கலாம். இந்நாட்களில் ஷ்யாம் பிரிவு இஸ்லாமியர்கள் துக்க நாளாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

அந்நாளில் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடம்பை கத்தி மற்றும் பிளேடு போன்ற கூர்மையான ஆயுதங்களால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று தங்களது துயரத்தை வெளிப்படுத்துவார்கள். ஈராக்கில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி தங்களை வருத்திக் கொண்டு வீதிகளில் ஊர்வலம் செல்வார்கள். தங்களது இறைவனின் வார்த்தைகளை ஏற்று அதற்கு அடிபணிந்து நடப்பவனே முஸ்லிம் ஆவான். இதனை ஏற்றுக்கொள்ளாத மனிதன் முஸ்லிம் ஆவதில்லை.

இதனை கடைபிடிப்பதன் மூலம் தான் ஒருவன் முஸ்லிம் ஆகிறான். இஸ்லாமின் சாராம்சம் முழுவதும் ஒரே வரியில் சுருக்கி விடலாம் “படைத்தவரை வணங்கு படைக்கப்பட்டதை வணங்காதே” என்பதுதான்.இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவர்களது சக்தி இயங்குகின்றன. ஆகவே நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்.  சூரியனையும்  , சந்திரனையும் படைத்தவன் ஆகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்று குரான் கூறுகிறது. இஸ்லாம் என்பது சகோதரத்துவம் வற்புறுத்தும் மதமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *