உலகப் பேரழகி கிளியோபட்ராவின் கதை

கிளியோபட்ரா பல கோடி உயிர்களை கவர்ந்திழுத்த மகா தேவதை .கிளியோபட்ரா பெண்மையின் நலீனத்திற்கு வல்லினம் வாசித்தவர் .ரோமாபுரி நாயகர்களின் ஆளுமைகளை துயிலுரித்து மெல்லினம் பாதித்தவர். கிளியோபட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப்பாலில் தான் குளிப்பார் .அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீல நிறப் பூ போல் இருக்கும் .சாக்லேட் நிறம் என்று சொல்வார்களே அதே போல் ,தனது உடலை வெண்மையாக காட்ட வித்தியாசமான குளியலை தேடினார்.

தேடிப்பிடித்த சித்த வகை குளியல் தான் இந்த கழுதைப் பால் குளியல் .கழுதை பால் குளித்தாள் உடல் மினுமினுக்கும் ,உடல் ஜொலி ஜொலிக்கும் என்று அவர் நம்பினார். கழுதைப்பாலில் குளிப்பதற்காக கிளியோபாட்ரா தனது அரண்மனைக்கு அருகில் ஒரு பெரிய கழுதை பண்ணையை வைத்தார் .அது மட்டுமல்ல அந்தப் பாலில் குங்குமப் பூவும் கலந்தார். கிளியோபாட்ரா என்ற பெயரில் ஏழு கிளியோபாட்ரா வாழ்ந்து வந்தார்கள் .

ஆனாலும் எகிப்து நாட்டில் ஏழாவது கிளியோபாட்ரா இவர்தான் .தன்னை பல வன்மை களால் அலங்கரித்து கொண்டுள்ளார் .உடல் மினுமினுப்பு காக முத்துக்களை அரைத்து பூசிப்பாள்  .அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி போன்றவர்களின்காதல் மனைவியாக இருந்தார் .அவள் எகிப்து பேரரசியாக இருந்தாலும் ,அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சத்தில் இருந்து வந்தவர்கள்

.தாலமிகள் தங்களை கிரேக்கர்கள் என்று கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர் .ஆனால் பன்னிரண்டாம் தாலமிகளில் பிறந்தவள் கிளியோபட்ரா .தன்னை எகிப்து தேவதை என்று மறுபிறவி என்றும் கூறிக்கொண்டார் .தன்னுடைய முன்னோர்களைப் போல் இல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டார். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாக கொண்டாடினர் .வசீகரம் ,இளமை ,புத்தி ,கூர்மை ,தேசப்பற்று ,நினைத்ததை சாதிக்கும் உறுதி இவையாவும்  கிளியோபாட்ராவின் வெற்றியின் ரகசியம்.

11 மொழிகள் சரளமாக பேசுவார். பேச்சாற்றல் நிறைந்தவள் அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை .14 வயது ஆகும்போது தந்தையோடு சேர்ந்து ஆட்சி பகிர்ந்துகொண்டார் .தந்தை இறந்த பொழுது பின்பு பதினெட்டாவது வயதில் அரசியாக வந்தார். எகிப்து வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது இதனால் அந்த நாட்டு வழக்கப்படி தனது தம்பியான பதிமூன்றாம் தாலமிகளில் திருமணம் செய்து கொண்டார் .அக்காலத்தில் தம்பியையும் திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது. எகிப்தில் பெரும் படை கிடையாது .

செல்வதற்கு பஞ்சமில்லை .அதனால் அண்டை நாடுகளுக்கு எழுத்தின் மேல் பொறாமை .எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபட்ரா எடுத்த முடிவு யாரும்  எதிர்பார்க்காதது அப்போது வலிமையாக இருந்த ஜூலியஸ்சீ ஸரை காதலிக்க முடிவு செய்தார் .முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் சிக்க வைத்தார் கிளியோபாட்ரா  .அப்போது கிளியோபட்ரா அவருக்கு வயது 21 சீசருக்கு வயது 54.

அதன் பின்பு கிளியோபாட்ராவை ரோம் அழைத்து வந்தார்  சீசர்இது ரோமானிய மக்களுக்கு பிடிக்கவில்லை .இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது .அதிகாரப் போராட்டத்தில் சீஸர் கொல்லப்பட்டார். ஆட்சியை பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல் .இனியும் அங்கு இருந்தால் ஆபத்து என்று உணர்ந்தால் கிளியோபட்ரா .உடனடியாக எகிப்திற்கு தப்பினார் .சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவருடைய காதல் அத்தியாயம் .தனது சாகசத்தால் ரோமப் பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றினார் .தளபதி மார்க் ஆண்டனி திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தை பிறந்தது .இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரன் கிளியோபட்ரா போன்று எகிப்திய அரசுக்கு வேறு வாரிசுகள் இல்லாமல் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது .கடும் கோபத்தில் அகஸ்டஸ் சீசர் எகிப்தின் மீது போர் தொடுத்தார் .இதில் பரிதாபமாக ஆண்டனி தற்கொலை செய்து கொண்டார் .கிளியோபட்ராவும் அவளுடைய குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர் .சிறை வாழ்க்கை விரும்பாத கிளியோபட்ரா எகிப்து பாலைவனத்தில் இருக்கும் கொடிய விஷத்தை வெள்ளை பாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் .39 வயதில் அவளுடைய சகாப்தம் முடிவடைகிறது.